தூத்துக்குடி
நவதிருப்பதி திருப்புளிங்குடி, கருங்குளம்பெருமாள் கோவில்களில் கருடசேவை
|நவதிருப்பதி திருப்புளிங்குடி, கருங்குளம் பெருமாள் கோவில்களில் கருடசேவை நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நவதிருப்பதி திருப்புளிங்குடி, கருங்குளம் பெருமாள் கோவில்களில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதி
நவதிருப்பதி கோவில்களில் 3-ம் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளிங்குடி காய்சின வேந்தப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.45 மணிக்கு காய்சினி வேந்தப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாடவீதி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கருங்குளம்
இதேபோன்று, கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் தெற்குகோவிலுக்கு எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 11.30 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு சாத்துமுறையை தொடர்ந்து தீர்த்தம், சடாரி, பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு இரவு 10.30. மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி மலையை சுற்றி வந்து அருள்பாலித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு மலையிலிருந்து சுவாமி இறங்கினார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் சேர்க்கைக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்