நாகப்பட்டினம்
கோவில்களில் நவராத்திரி வழிபாடு
|கோவில்களில் நவராத்திரி வழிபாடு நடந்தது.
வேதாரண்யம்:-
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் யாழை பழித்த மொழியம்மை எனும் வேதநாயகி அம்மனுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வேல்நெடுங்கண்ணி அம்மன் பக்தர்களுக்கு அன்னப்பூரணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் சுந்தர குஜாம்பிகை அம்பாள் யானை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது. அப்போது அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.