< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு பயிற்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு பயிற்சி

தினத்தந்தி
|
29 May 2022 4:06 PM GMT

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு பயிற்சி இணைய வழி மூலம் நடந்தது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு பயிற்சி இணைய வழி மூலம் நடந்தது.

விழிப்புணர்வு பயிற்சி

தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண்மை சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு பயிற்சியை இணைய வழி மூலமாக நடத்தியது. இதில் ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து பேசினார்.

மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இயக்குனர் சேகர், முன்னாள் வேளாண் விரிவாக்க துறை தலைவர் கனகசபாபதி ஆகியோர் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை மற்றும் வளம் குன்றா வேளாண்மையின் அவசியம் குறித்து பேசினர்.

மண்வளம் காத்தல்

இந்த பயிற்சியை ஒருங்கிணைத்த மைய இயக்குனர் ராமன், இயற்கை முறையில் மண்வளம் காத்தல், கரிம பொருட்களை அதிகரித்தல், பயிர் சுழற்சி, இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி பேசினார்.

இயற்கை வேளாண் வல்லுனர் ஜேய்சன் ஜெரோம், இயற்கை வேளாண்மை, இடுபொருள் பயன்பாடு, விதை சேமிப்பு, இயற்கை பண்ணையில் பல்லுயிர் சூழல் பற்றி பேசினார்.

செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி, பயிரிடும் முறைகள், பயிர் பெருக்கம் மற்றும் உயிர் பல ஊக்கிகளின் பயன்பாடு பற்றிய வழி முறைகள் பற்றி பேசினார்.

முடிவில் இணை விஞ்ஞானி ரமேஷ் நன்றி கூறினார்.பயிற்சியில் சுமார் 200-க்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

---

மேலும் செய்திகள்