< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்- அமைச்சர் கடிதம்
|21 Oct 2023 10:01 AM IST
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்: சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட சமமான வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.