நீலகிரி
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
|மஞ்சூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலகு சார்பில் ஒரு வார சிறப்பு முகாம் அரசு பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் ராம்கி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பாதுகாப்பு படை அலுவலர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
இதில் கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து முகாமை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சமூக பணிகளை மேற்கொண்டனர். இதில் பள்ளிகளை சுற்றியுள்ள புதர்கள் மற்றும் சாலையோர குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடக்க உள்ளது.