< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தேசிய வாக்காளர் தின விழா
|26 Jan 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் தேசிய வாக்காளர் தின விழா
சின்னசேலம்
சின்னசேலம் தனியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் தாசில்தார் இந்திரா தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றும் ஓட்டுரிமை, 18 வயது பூர்த்தி அடைந்த வாக்களிப்பதன் அவசியம், தேர்தல் ஆணையத்தின் பணிகளை கவுரவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவையொட்டி கல்லூரி மாணவிகளுக்கிடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம், பாட்டு, குழு நடனம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தல் துணை தாசில்தார் மணி, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.