< Back
மாநில செய்திகள்
தேசிய நீச்சல் போட்டி மதுரை மாணவர் பதக்கம் வென்றார்
மதுரை
மாநில செய்திகள்

தேசிய நீச்சல் போட்டி மதுரை மாணவர் பதக்கம் வென்றார்

தினத்தந்தி
|
23 Aug 2023 2:31 AM IST

தேசிய நீச்சல் போட்டி மதுரை மாணவர் பதக்கம் வென்றார்


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய நீச்சல் சங்கம் சார்பில் 49-வது ஜூனியர்களுக்கான தேசிய நீச்சல் போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் மதுரை யாதவா கல்லூரி மாணவர் குணபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் குணபாலன் 200 மீட்டர் பிரிஸ்டைல் ரிலேயில் வெண்கல பதக்கம் வென்றார். தேசிய போட்டியில் பதக்கம் வென்ற மாணவனை தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்