< Back
மாநில செய்திகள்
நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தேசிய மாணவர் படை கர்னல் கமாண்டன்ட் பதவி
மாநில செய்திகள்

நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தேசிய மாணவர் படை கர்னல் கமாண்டன்ட் பதவி

தினத்தந்தி
|
27 Jun 2022 6:47 PM IST

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் தேசிய மாணவர் படை திட்டத்தின் கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவி வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தேசிய மாணவர் படையில் கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவியானது சமீபத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த வருடம் இந்தப் பதவியானது இந்தியா முழுவதும் 11 பேருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதன் பதவியேற்பு விழா சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

விழாவில் கவுரவ கர்னல் கமாண்டன்ட் பதவி பிரமாணமும் அதற்குரிய அதிகாரப்பூர்வ கடிதத்தையும் கர்னல் பாயிஜோசப் கட்டளை அதிகாரி தமிழக தேசிய மாணவர் படை மற்றும் லெப்டினன்ட் கர்னல் நிதீஷ் குமார் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணிக்கு வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக தேசிய மாணவர் படை அதிகாரி சிவகுமார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்