< Back
மாநில செய்திகள்
அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தினத்தந்தி
|
7 Sept 2023 3:27 PM IST

அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் 3 நாட்களாக நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ராசி என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்களாக நடைபெற்றது. இதில் ராசி என்ஜினீயரிங் கல்லூரியின் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அஞ்சூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பள்ளி வளாகம் சுத்தப்படுத்தல், கட்டிடம் சரிசெய்தல் வர்ணம் பூசுதல், தளம் சிமெண்டு பூசுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது. விழாவில் ராசி கல்லூரியின் தலைவர் டாக்டர் ரேணுகாதேவி, கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரெங்கநாதன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரெங்கநாதமுத்து, கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் வீரப்பன், துணைமுதல்வர் டாக்டர் ரவிக்குமார் மற்றும் பேராசியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்