< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேசிய அறிவியல் மனப்பான்மை தினஉறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
|25 Aug 2023 12:15 AM IST
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, பள்ளிகளில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, தேவதானப்பட்டி, தேவாரம், கடமலைக்குண்டு அம்பேத்கர் நகர், போடி நாகலாபுரம், கூடலூர், சுருளிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் நேற்று முன்தினம் நடந்தது. அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர், கம்பம் செயலாளர் திலீபன், மாவட்ட இணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், ஞானசுந்தரி, செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி, கவுசல்யா, சத்யா ஆகியோர் இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.