< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தேசிய கணித தின விழா
|24 Dec 2022 12:15 AM IST
பாச்சேரி வித்யாலயா பள்ளியில் தேசிய கணித தின விழா
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பாச்சேரி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் தேசிய கணித தினவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியைகள் சுபிபாத்திமா, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித ஆசிரியை ரம்யா கணிதமேதை ராமானுஜரின் கண்டுபிடிப்புகளை செயல் விளக்கங்களுடன் கூறினார். விழாவையொட்டி மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் பாரதி, கற்பகம், ஜெயந்தி, செல்வி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியை சாரதா நன்றி கூறினார்.