< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
தேசிய அளவிலான கருத்தரங்கம்
|15 March 2023 12:08 AM IST
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
மன்னார்குடி:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினி பொறியியல் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரியின் துணைத்தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமை தாங்கினார். கணினி பொறியியல் துறை பேராசிரியர் கவிதா ராஜாமாணிக்கம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பேசினார். கருத்தரங்கில் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.