< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
தேசிய பெண் குழந்தைகள் தினம்
|13 Oct 2023 12:15 AM IST
வேதாரண்யத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேதாரண்யத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் ரூபபாலன் முன்னிலையில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் வரவேற்றார். இதில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் கலந்துகொண்டு பேசினார். ராஜாஜி பூங்காவில் புறப்பட்ட ஊர்வலத்தை வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பதாகைகள் ஏந்தி பெண் குழந்தை பாதுகாப்பை உறுதிசெய்வோம், குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா, குழந்தை தொழிலாளர்களே இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என கோஷங்கள் எழுப்பினர். இதில் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த வின்சென்ட் ஜெயந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.