< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தஞ்சையில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறந்தன
|12 Sept 2022 1:07 AM IST
தஞ்சையில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறந்தன
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாடு முழுவதும் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. தஞ்சை மாநகராட்சி அலுவலகம், ஆயுதப்படை மைதானம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன. மேலும் தஞ்சை மாவட்டத்தில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நடைபெறுவதாக இருந்த அரசு விழாக்களும் ஒத்தி வைக்கப்பட்டன.