< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வீடுகளில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடிகள்
|14 Aug 2022 11:13 PM IST
வீடுகளில் தேசியக்கொடிகள் பட்டொளி வீசி பறந்தன.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அரியலூர் நகராட்சியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுதந்திர தினத்தையொட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக வீடு வீடாக இலவசமாக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரும்பாலான வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பட்டோளி வீசி பறக்கிறது. நகரில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் தேசியக்கொடி கட்டப்பட்டுள்ளன.