< Back
மாநில செய்திகள்
நாகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
மாநில செய்திகள்

நாகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

தினத்தந்தி
|
26 Jan 2023 10:19 PM IST

100 அடி உயர கம்பத்தில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.

நாகை,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் நாகை மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில், கலெக்டர் அருண் தம்புராஜ் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.



மேலும் செய்திகள்