< Back
மாநில செய்திகள்
கட்சி கொடிகளுக்கு இடையே தாழ்வாக பறக்கும் தேசியக்கொடி
திருச்சி
மாநில செய்திகள்

கட்சி கொடிகளுக்கு இடையே தாழ்வாக பறக்கும் தேசியக்கொடி

தினத்தந்தி
|
18 Aug 2022 3:07 AM IST

கட்சி கொடிகளுக்கு இடையே தேசியக்கொடி தாழ்வாக பறக்கிறது.

துறையூர்:

துறையூர் அண்ணா பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை அருகே பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி சிலர் கட்சி கொடிக்கம்பங்களுக்கு இடையே தேசியக்கொடியையும் பறக்க விட்டிருந்தனர். ஆனால் கட்சி கொடிகளை விட தேசியக்கொடி மிகவும் தாழ்வாக பறக்கிறது. தேசியக்கொடியை கட்சி கொடிகளுக்கு இடையே அமைக்கக்கூடாது, சாய்ந்த நிலையிலோ, மற்ற கொடிகளை விட உயரம் குறைவாகவோ அமைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளநிலையில், கட்சி கொடிகளை விட தேசியக்கொடி தாழ்வாக பறப்பதை தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்