< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தின கருத்தரங்கு - மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்பு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தின கருத்தரங்கு - மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்பு

தினத்தந்தி
|
11 July 2023 6:04 PM IST

மீன் விவசாயிகள் தின இரண்டு நாள் கருத்தரங்கை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தின இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்று, 2 நாள் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மீனவ பிரதிநிதிகளுடன் இணைய வழியாக மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். இந்த விழா நடைபெறும் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் மீன் வளர்ப்பு, இறால்களுக்கான தீனிகள், மீன் எண்ணெய், ஊறுகாய், மீன்பிடி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய 50 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்