< Back
மாநில செய்திகள்
மாயனூர் காவிரி ஆற்று பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

மாயனூர் காவிரி ஆற்று பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு

தினத்தந்தி
|
23 April 2023 12:04 AM IST

மாயனூர் காவிரி ஆற்று பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் மீட்பு படையினா் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காவிரி ஆற்றையொட்டி உள்ள பகுதியில் வெள்ளக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி செய்ய வேண்டும்?, பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும்?, புதுமாதிரியான மீட்பு முறைகளை எவ்வாறு கையாலாம் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மாயனூர் கட்டளை, மேலமாயனூர் வாய்க்கால் பகுதிகளிலும் ஆய்வு நடந்தது.

மேலும் செய்திகள்