வேலூர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
|தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.
காட்பாடி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு காட்பாடியில் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கே.விஸ்வநாதன், செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் முனுசாமி, மாவட்ட நிர்வாக குழு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டினை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் ஊக்கமுடன் முயற்சி மேற்கொண்டால் மிக சிறந்த மாணவர்களாக வளர முடியும் என்றார்.
71 ஆய்வு அறிக்கைகள்
மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி, மாநில செயலாளர் சேதுராமன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்கான சிறப்பு உபகரணத்தையும், மண் பானை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள், தேட்டாங்கொட்டை என்ற இயற்கையான பொருளை கொண்டு எவ்வாறு தண்ணீரை சுத்தப்படுத்துவது என்பது உள்பட 71 விதமான ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த ஆய்வு அறிக்கைகளில் இருந்து மாநில அளவிலான போட்டிக்கு மாணவிகள் யுவஸ்ரீ, சுபிக்ஷா, திவ்யாஸ்ரீ, பாவனா, மாணவர்கள் சாய்தார், நரேஷ், பூஜாலட்சுமி, கோமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில போட்டியில் பங்கேற்கின்றனர்
இவர்கள் அடுத்த மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற உள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் மஸ்தான் நன்றி கூறினார்.