< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் திடீர் ஆய்வு
மாநில செய்திகள்

புதுக்கோட்டை அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
29 April 2023 9:00 PM IST

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உடன் இருந்தார்.

மாணவ, மாணவிகள் அமர்வதற்கான இடங்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆனந்த், அரசு சிறார் கூர்நோக்கு மையங்களில் உள்ள சிறுவர்கள் மன அழுத்தம் காரணமாகவே அங்கிருந்து தப்பித்துச் செல்வதாகவும், எனவே கூடுதல் ஆலோசகர்களை நியமித்து அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்