கடலூர்
வீரதீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு தேசிய விருது: விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசிநாள்
|வீரதீர செயல்புரிந்த குழந்தைகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசிநாளாகும்.
வீரதீர செயல்
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார்) எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
31-ந் தேதி கடைசி நாள்
அதன்படி 2023-
ம் ஆண்டுக்கான விருதுக்கு, தகுதி வாய்ந்த குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இவ்விருதுக்கான தகுதியுடையோர் https://awards.gov.inஎன்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.