< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தேசிய தடகள போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் தேர்வு
|20 Jan 2023 12:42 AM IST
தேசிய தடகள போட்டிக்கு கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் தேசிய தடகள போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
அகில இந்திய அளவிலான தடகள போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட மாணவரை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.