< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தேசிய விவசாய தின ஊர்வலம்
|24 Dec 2022 12:30 AM IST
வேடசந்தூர் அருகே தேசிய விவசாய தின ஊர்வலம் நடந்தது.
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதுக்கோட்டை அரசு வேளாண்மை கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள் சார்பில் தேசிய விவசாய தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் முனைவர் நக்கீரன், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன் , மகேந்திரக்குமார், குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, ராதா, வேடசந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னசாமி மற்றும் கல்லூரி மாணவிகள் விவசாய வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அன்னாள்செல்வி, ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் அகிலா, சுவேதா, ஆப்ரின்ரிப்பானா, கிருத்திகா, அஸ்வேதா, திவ்யபிரபா, திவ்யகீர்த்திகா, லக்சனா பிளவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.