< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்

குறிஞ்சிப்பாடி, பெண்ணாடத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் பங்கேற்பு

தினத்தந்தி
|
11 Aug 2022 5:14 PM GMT

குறிஞ்சிப்பாடி, பெண்ணாடத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார்கள்.


குறிஞ்சிப்பாடி,

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட கல்வி குழுத்தலைவர் என்ஜினீயர் சிவகுமார் வரவேற்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்

அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று 846 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 458 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் டாக்டர், என்ஜினீயர் என்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், பாலமுருகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராமர், கவுன்சிலர் எஸ். பி. கண்ணன் நகர கல்வி குழு தலைவர் ஜெய்சங்கர், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.

பெண்ணாடம்

இதேபோல் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் வரவேற்றார். விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக அனைவரும் போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் ல் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு, நகர செயலாளர் குமரவேல், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செம்பையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஆசிரியர் கமலநாதன் ஒருங்கிணைத்தார். முடிவில் ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்