< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில்  போதைப்பொருட்கள் விற்ற மேலும் 30 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்ற மேலும் 30 பேர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்ற மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் போதைப்பொருட்கள் விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை நேற்றும் 2-வது நாளாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்