< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
போதை பொருட்கள் விற்பனை
|31 Jan 2023 2:19 AM IST
கபிஸ்தலம் அருகே போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கபிஸ்தலம், ஜன.31-
கபிஸ்தலம் போலீசார் பாலக்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கபிஸ்தலம் பாலக்கரையில் பெட்டிக்கடை நடத்தி வரும் சுரேஷ் (வயது36), இளங்கோவன்(50), செல்வராஜ்(60) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசாா் சுரேஷ், இளங்கோவன், செல்வராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.