< Back
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கிய போதை பவுடர் பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

தண்டையார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கிய போதை பவுடர் பறிமுதல் - ஒருவர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2023 8:50 AM IST

தண்டையார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் போதை பவுடர் பதுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தர் (வயது 60). இவர் மீது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்படி மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக தண்டையார்பேட்டை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, வைத்தியநாதன் தெருவில் உள்ள சுந்தர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு போதை தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் விற்பனைகாக பதுக்கி வைக்கப்பட்ட 1/2 கிலோ 'மெத்தபேட்டமின்' போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவான சுந்தரை உடனடியாக ஆஜராகும்படி வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக சுந்தரின் உறவினரான தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரை கைது செய்த மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்