< Back
மாநில செய்திகள்

திருச்சி
மாநில செய்திகள்
சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

17 Oct 2022 3:27 AM IST
சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் 4-ம் நாளான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் சவுரிக்கொண்டை, ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், கையில் தங்கக்கிளி, பவளமாலை, முத்துச்சரம், அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.