< Back
மாநில செய்திகள்
நெல்லையில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டல்

தினத்தந்தி
|
18 Aug 2023 9:59 PM IST

நெல்லையில் உள்ள இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி,

நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் சூட்டி நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை நெல்லை மேயர் சரவணன் திறந்து வைத்தார். பின்னர் மேயர் சரவணன் மற்றும் நெல்லை கண்ணன் குடும்பத்தினர் அந்த சாலையில் நடந்து சென்றனர்.

மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, ரேவதி மற்றும் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்