< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழில் பெயர் பலகைகள்; ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
|31 Jan 2024 4:51 PM IST
பெயர் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்ற அரசாணை உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இது தொடர்பாக ஈரோட்டில் வரும் 2-ந்தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.