< Back
மாநில செய்திகள்
பசும்பொன் தேவர் பெயரை சூட்ட கோரிக்கை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பசும்பொன் தேவர் பெயரை சூட்ட கோரிக்கை

தினத்தந்தி
|
22 Oct 2022 11:36 PM IST

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பரமக்குடி,

பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சி.எம்.டி.ராஜா சேதுபதி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மணிமுத்து அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையாரை ஒன்றிணைத்து தேவர் இனமாக அறிவித்து அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டு உள்ளார். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பசும்பொன்னில் வருகிற 29-ந் தேதி அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அந்த அன்னதானத்தை ஓய்வு பெற்ற தடவியல் துறை ஐ.ஜி.விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். இதில் நிர்வாகிகள் சிவராமன், ராஜ்குமார், வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்