நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கையில் ஆர்ப்பரித்து விழும் நீர் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
|கொல்லிமலை ஆகாய கங்கையில் ஆர்ப்பரித்து விழும் நீரால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் ,
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. அதில் புகழ் வாய்ந்த நீர்வீழ்ச்சியான ஆகாய கங்கைக்கு நெருங்க முடியாத அளவிற்கு சாரல் வீசி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ள நீர் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அங்கு செல்ல கடந்த சில நாட்களாக அங்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த தடை நீடிக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டப் பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அடுத்ததாக அவர்கள் செல்வது ஆகாய கங்கை தான். ஆனால் தற்போது தடை விதிப்பால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்