< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல்: 40 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மூலப்பொருளை ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
|9 Feb 2023 10:09 PM IST
தேசிய நெஞ்சலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
நாமக்கல்,
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பெட்ரோல் மூலப்பொருளான 'எத்தனால்' திரவத்தை சுமார் 40 ஆயிரம் லிட்டர் ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் பகுதியில் தேசிய நெஞ்சலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லாரி தீப்பிடிக்காமல் இருக்க அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.