< Back
மாநில செய்திகள்
நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்
மாநில செய்திகள்

நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்

தினத்தந்தி
|
9 March 2023 10:14 PM IST

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

நாமக்கல்,

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர். இதனிடையே பீகார் மாநில அதிகாரிகள் குழு, தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்ற போலீசார், இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.


மேலும் செய்திகள்