< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து - மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு
|31 Dec 2022 7:10 AM IST
நாமக்கல் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும், ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.