< Back
மாநில செய்திகள்
கறிக்கோழி விலை 5 நாட்களில் 19 ரூபாய் உயர்வு
மாநில செய்திகள்

கறிக்கோழி விலை 5 நாட்களில் 19 ரூபாய் உயர்வு

தினத்தந்தி
|
31 Jan 2024 3:37 PM IST

உற்பத்தி குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.107 ஆக உள்ளது.

நாமக்கல்:

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. தினசரி பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.) நிர்ணயம் செய்கிறது.

கடந்த 1-ந்தேதி ஒரு கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விலையானது ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ரூ.88 ஆக இருந்த கறிக்கோழி விலை தற்போது உற்பத்தி குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக படிப்படியாக உயர்ந்து நேற்று கிலோ ரூ.107 ஆக இருந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.19 அதிகரித்ததால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்