நாமக்கல்: நிலத்தை உழும் போது கிணற்றில் விழுந்த டிராக்டர் - விவசாயி பலி...!
|நாமக்கல் அருகே நிலத்தை உழும் போது டிராக்டர் கிணற்றில் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
கந்தம்பாளையம் ,
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே புதூரை பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது61). இவர் விவசாயம் செய்து வருகிறார் சம்பவமன்று தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரை வைத்து உழவு ஒட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு இருந்த கிணற்றின் அருகே டிராக்டர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே விவசாயி சண்முகம் உயிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த டிராக்டரை கிரைன் மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்து விவசாயி சண்முகத்தின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.