< Back
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குமாத்திரைகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குமாத்திரைகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

தினத்தந்தி
|
17 Oct 2023 12:30 AM IST

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மாத்திரைகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிபட்டியை சேர்ந்தவர் பஞ்சாலை (வயது 51). இவர் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த ஓராண்டாக சாப்பிட்ட மாத்திரைகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பஞ்சாலை மீண்டும் உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக குற்றம்சாட்டினார். அவரை சமரசம் செய்த போலீசார் கலெக்டரிடம் நேரில் குறைகளை தெரிவிக்க அழைத்து சென்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்