< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி

தினத்தந்தி
|
27 Jun 2023 12:30 AM IST

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில் நேற்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனிதசங்கிலி நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனலட்சுமி தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு முன்னிலை வகித்தார்.

இதையொட்டி பூங்கா சாலை, பிரதான சாலை, கோட்டை சாலை என மலைகோட்டையை சுற்றி கைகோர்த்து நின்ற மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தி நின்றனர். இதில் நாமக்கல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்