< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயருக்குஇந்த ஆண்டின் முதல் வெண்ணைகாப்பு அலங்காரம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|5 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி காலையில் நடைதிறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரம் அல்லது தங்ககவசம், முத்தங்கி போன்ற அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
குறிப்பாக பனிக்காலங்களில் இரவு நேரத்தில் பெரும்பாலான நாட்கள் வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.