< Back
மாநில செய்திகள்
ஆங்கில புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆங்கில புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 2 டன் பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது.

பின்னர் வெற்றிலை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து எண்ணெய், பால், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

பூக்களால் அபிஷேகம்

இதை தொடர்ந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை, சாமந்தி, அரளி உள்ளிட்ட சுமார் 2 டன் பூக்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாச்சாரியர்கள் பூக்களை கொட்டி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்