< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து
|6 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென புகைமூட்டம் எழுந்தது. அப்போது அங்குள்ள மீட்டர் போர்டு பாக்சில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அங்கு வந்த வாடிக்கையாளர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிக வெப்பத்தினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.