< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை மறுநாள் 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்
|30 Oct 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில், நாளை மறுநாள் 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.