< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
26 Sep 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் மற்றும் பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இதையொட்டி நாமக்கல் மின்பகிர்மான வட்ட கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் மண்டல செயலாளர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். தொழிலாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளனம், என்ஜினீயர்கள் சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.எஸ்.யு. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் மின்வாரியத்தில் என்ஜினீயர்கள், அதிகாரிகள் முதல் லைன்மேன்கள், ஹெல்பர்கள் வரை 1,700-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று 850-க்கும் மேற்பட்டவர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்சார பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்