< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  பாரதியார் தின விளையாட்டு போட்டிகள்  பூப்பந்து போட்டியில் அரசு பள்ளிக்கூடம் முதலிடம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் பூப்பந்து போட்டியில் அரசு பள்ளிக்கூடம் முதலிடம்

தினத்தந்தி
|
24 Aug 2022 5:48 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த பாரதியார் தின விளையாட்டு போட்டியில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பூப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

நாமக்கல்லில் நேற்று நடந்த பாரதியார் தின விளையாட்டு போட்டியில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பூப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

விளையாட்டு போட்டிகள்

2022-20–23-ம் கல்வியாண்டுக்கான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 8 வட்டங்களில் கால்பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, மென்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியில் நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடமும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தது.

பூப்பந்து போட்டி

அதேபோல் கூடைப்பந்து போட்டியில் ரெட்டிப்பட்டி பாரதி வித்யாலயா, நகரவை உயர்நிலை பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதில் பாரதி வித்யாலயா பள்ளி முதலிடமும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன.

பூப்பந்து போட்டியில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அலங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புசெழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்