< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி திடீர் தர்ணா போராட்டம்
|1 Aug 2022 10:32 PM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி திடீர் தர்ணா போராட்டம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 75). இவர் நேற்று தனது மனைவியுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமரசம் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக சோழசிராமணி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், தனக்கு கூலித்தொகை முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் கூறினர். இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.