< Back
மாநில செய்திகள்
ஆடி 2-வது வெள்ளியையொட்டி  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆடி 2-வது வெள்ளியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
29 July 2022 9:31 PM IST

ஆடி 2-வது வெள்ளியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்