< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வினியோகம்  ஏராளமானோர் முண்டியடித்து வாங்கியதால் பரபரப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வினியோகம் ஏராளமானோர் முண்டியடித்து வாங்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
4 July 2022 2:03 PM GMT

நாமக்கல்லில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஏராளமான பட்டதாரிகள் முண்டியடித்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்லில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஏராளமான பட்டதாரிகள் முண்டியடித்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்

பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பரபரப்பு

இதையொட்டி காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ள காலிபணியிட விவரங்களை நேற்று ஏராளமான பட்டதாரிகள் பார்வையிட்டனர்.

அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவ நகலை வழங்கினர். குறைவான விண்ணப்ப படிவங்களே இருந்த நிலையில், ஏராளமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பெற முண்டி அடித்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் ஜெராக்ஸ் எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்