< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு
|25 July 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.
முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.73 ஆக குறைந்துள்ளது.
முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக நீடித்து வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.